×

கல்வராயன்மலையில் கடும் மூடுபனி

கல்வராயன்மலை, பிப். 29: கல்வவராயன் மலையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது வெள்ளி மலையை சுற்றியுள்ள கிராமங்கள் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் வெள்ளமலை, சேராப்பட்டு, மேல்பாச்சேரி, கிளாக்காடு, சின்ன திருப்பதி, கெடார் உள்ளிட்ட 193 சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. மலைவாழ் மக்கள் பிரதான தொழிலாக மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர். மழை இல்லாமல்போனதால் வறட்சியின் காரணமாக மரவள்ளி முற்றிலும் வயலில் காய்ந்து போய் இருந்தது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றத்தால் கல்வராயன்மலையில் பெரும்பாலான கிராமங்களில் பகலில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. மேலும் பகலில் அதிக அளவில் மூடுபனி பொழிவால் சாலைகள் இரண்டு காணப்படுவதால் வாகன ஓட்டிகளால் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது.

The post கல்வராயன்மலையில் கடும் மூடுபனி appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Kalvavarayan Hill ,Velli Hill ,Vellamalai ,Serapatu ,Melbacherry ,Klakkadu ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!